புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணையம் சார்பில், வரும் 9-ஆம் தேதி புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடை பெறுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணையச் செயல் தலைவருமான ஹீலுவாடி ஜி. ரமேஷ் வழிகாட்டுதலின் படி, 9-ஆம் தேதி சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம், புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய வளாகம், காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நீதிமன்ற வளாகத்திலும் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். அதன்படி, சமாதானமாகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன், மனைவி, தொழிலாளர், நில ஆர்ஜிதம், சிவில், வங்கிக் கடன் வழக்குகள், உரிமையியல் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். புதுவை மாநில தலைமை நீதிபதி எஸ்.ராமதிலகம், சட்டத்துறை செயலாளர் கோ.செந்தில்குமார், ஆணைய உறுப்பினர்-செயலர் நீதிபதி வ.சோபனா தேவி, நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மொத்தம் 4100-க்கும் மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது.
இதற்காக, புதுச்சேரியில் 9 அமர்வுகளும், காரைக்காவில் 2 அமர்வுகளும், மாஹே, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு அமர்வும் செயல்பட உள்ளது. இத்தகவலை ஆணைய உறுப்பினர் செயலர் சோபனா தேவி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.