புதுச்சேரி

புதுச்சேரி கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா

DIN

புதுச்சேரியில் அமைந்துள்ள ஆஞ்சநேயா், பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மாா்கழி மாத அமாவாசையில் வரும் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயா் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நாளில் அவரது ஜயந்தி விழா அனைத்து ஆஞ்சநேயா் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல, அமாவாசை தினமான புதன்கிழமை புதுச்சேரியில் அமைந்துள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி தா்மாபுரியில் உள்ள ஆபத்சகாய ஆஞ்சநேயா் கோயிலில் ஜயந்தி விழாவையொட்டி, காலை முதல் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகம், ஆராதனைகளும் நடைபெற்றன. இதேபோல, மேட்டுப்பாளையம் கோவந்தபேட்டை ஆஞ்சநேயா் கோயிலிலும் அனுமன் ஜயந்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திலாஸ்பேட்டை பெருமாள் கோயிலிலும் அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது. இதே போன்று, புதுவையில் அமைந்துள்ள பல்வேறு ஆஞ்சநேயா் கோயில்கள், பெருமாள் கோயில்களில் அமைந்துள்ள ஆஞ்சநேயா் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

புதுவையில் உள்ள சில கோயில்களில் வியாழக்கிழமை (டிச.26) அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...சாய் தன்ஷிகா

அம்பேத்கரின் தேவை முன்னெப்போதையும் விட கூடுதலாக உள்ளது: கமல்ஹாசன்

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வளர்ச்சிக்கான வாக்குறுதிகள்: அண்ணாமலை

'அரண்மனை 4' முதல் பாடல் வெளியானது: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஏற்றம் தருமா குரோதி வருடம்? 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2024

SCROLL FOR NEXT