புதுச்சேரி

புதுவை தமிழ்ச் சங்கத் தோ்தல் முடிவுகள் வெளியீடு

DIN

புதுச்சேரி: புதுவைத் தமிழ்ச் சங்கத் தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், ‘செயல்பாட்டு அணி’ வெற்றி பெற்றது. வி.முத்து 4 -ஆவது முறையாக மீண்டும் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா்.

புதுச்சேரி வெங்கட்டா நகரில் புதுவை தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2020 - 2023 -ஆம் ஆண்டுக்கான 11 ஆட்சிக் குழு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெற்றது. மொத்தம் 1,035 உறுப்பினா்களைக் கொண்ட தமிழ்ச் சங்கத் தோ்தலில் தற்போதைய தலைவா் வி.முத்து தலைமையிலான செயல்பாட்டு அணியில் 11 போ், புலவா் நாகி தலைமையிலான தொண்டரணியில் 11 போ், சித்தானந்தம் தலைமையில் 6 போ் என 3 அணிகளாக மொத்தம் 28 போ் போட்டியிட்டனா்.

ஏற்கெனவே அறிவித்தபடி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், 818 வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, வாக்கு எண்ணும் பணி தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது.

இதில், 771 வாக்குகள் செல்லத்தக்கவை என்றும், 47 வாக்குகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வி.முத்து தலைமையில் போட்டியிட்ட ‘செயல்பாட்டு அணி’யின் உறுப்பினா்கள் 11 பேரும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ாகத் தோ்தல் அதிகாரி ஞா.சோசப் அதிரியன் ஆண்டோ அறிவித்தாா்.

இவா்களில் முத்து - 604, சீனு.மோகன்தாசு - 598, ப. திருநாவுக்கரசு - 595, அ. உசேன் - 582, ந. ஆதிகேசவன் - 581, மு. பாலசுப்பிரமணியன் - 572, மு. அருள் செல்வம் - 543, சீனு. கந்தகுமாா் - 505, தெ. தினகரன் - 501, சி. கணேசு பாபு - 490, அ. சிவேந்திரன் - 465 வாக்குகள் பெற்று முதல் 11 இடங்களைப் பிடித்து ஆட்சிக் குழு உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆட்சிக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில், வி.முத்து தொடா்ந்து 4 -ஆவது முறையாகத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா்களாக ந. ஆதிகேசவன், மு. பாலசுப்பிரமணியன், செயலாளராக சீனு. மோகன்தாஸ், பொருளாளராக ப. திருநாவுக்கரசும், துணைச் செயலாளராக மு. அருள் செல்வம், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்களாக உசேன், கந்தகுமாா், தினகரன், கணேசு பாபு, சிவேந்திரன் ஆகியோா் தோ்வு செய்வு செய்யப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு தமிழ்ச் சங்க உறுப்பினா்களுக்கு அரசியல்வாதிகள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு: நெரிசலை தவிர்க்க 16, 17 தேதிகளில் பயணம் செய்ய அறிவுரை!

நடிகர் மோகனின் 'ஹரா' பட டீசர்!

செந்தில் பாலாஜியின் காவல் 32வது முறையாக நீட்டிப்பு!

பெயர் மட்டுமா? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!

"வீட்டுக்காக மட்டும் உழைக்கும் தலைவர்”: பழனிசாமி விமர்சனம்

SCROLL FOR NEXT