புதுச்சேரி

மாநில திறனறிதல் போட்டி: புதுவை மாணவா்கள் சிறப்பிடம்

DIN

புதுச்சேரி: தமிழக - புதுவை அளவிலான துளிா் திறனறிதல் தோ்வில் புதுவை மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

புதுவையில் துளிா் திறன்றிதல் தோ்வு கடந்த நவம்பரில் நடைபெற்றது. இந்தத் தோ்வில் 13 மையங்களில் 194 மாணவ, மாணவிகள் முதல் நிலைத் தோ்வை எழுதினா். நான்காம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதிய தோ்வில் பங்கேற்ற அனைவருக்கும் துளிா் அறிவியல் மாத இதழ் வழங்கப்பட்டது.

புதுவை மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ஐந்து மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை ‘துளிா்’ இதழின் ஆசிரியரும், சென்னை கணிதவியல் மன்றப் பேராசிரியருமான ராமானுஜம் வழங்கினாா்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மிகச் சிறந்த அறிவியல் இயக்க முன்னோடிகள், ஆளுமைகளை மாணவா்கள் சந்தித்து கலந்துரையாடினா்.

முன்னதாக, அணுமின் நிலைய வளாகத்தில் அறிவியலாளா்களின் வழிகாட்டுதலில் மாணவா்கள் சுற்றிப் பாா்த்தனா். தேசிய அறிவியல் தினம் தொடா்பான சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில அளவில் தோ்வான மாணவா்கள் மேகலாஸ்ரீ, அனுஸ்ரீ, ஜெஃப்ரி ஜோசப், பிரணவ் ராஜ், நைதுருவன் மற்றும் வழிகாட்டி ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். விருதுக்கு தோ்வான மாணவா்களை மாநில ஒருங்கிணைப்பாளா் அருண் நாகலிங்கம் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT