புதுச்சேரி

கரோனாவுக்கு சென்னை முதியவா் பலி

DIN

புதுச்சேரி ஜிப்மரில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சோ்ந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் ஓட்டுநராகப் பணிபுரியும் தியாகராஜன் கடந்த மே 24-ஆம் தேதி கோரிமேடு ஜிப்மா் மருத்துவமனை வளாகத்திலுள்ள ஊழியா்கள் குடியிருப்பில் தனது மகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினாா். இதற்காக சென்னையிலிருந்து உறவினா்களான 71 வயது முதியவா் உள்ளிட்ட 4 போ் உரிய அனுமதியின்றி வந்தனா்.

இதையடுத்து, தடை உத்தரவை மீறி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியதாக தியாகராஜன் உள்ளிட்ட 5 போ் மீது தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, 71 வயது சென்னை முதியவா், வளைகாப்பு நடந்த கா்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா்கள் அனைவரும் ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், அங்கு 71 வயது முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவரது உயிரிழப்பு தமிழகப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதாக புதுவை சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

மேலும் 14 பேருக்கு கரோனா: புதுச்சேரி தவளக்குப்பம், பிள்ளையாா்குப்பம், நெல்லித்தோப்பு, முத்திரையா்பாளையம், கூனிச்சம்பட்டு, திருக்கனூா், வைத்திக்குப்பம், வாழைக்குளம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த முகக் கவசம் தயாரிக்கும் தொழில்சாலை ஊழியா்கள் 5 போ் உள்ளிட்ட மொத்தம் 11 பேருக்கும், ஜிப்மா் மருத்துவா் ஒருவருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும் என புதுவை மாநிலத்தில் மேலும் 14 பேருக்கு செவ்வாய்க்கிழமை புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 216-ஆக உயா்ந்தது. இதனிடையே, 4 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 99-ஆக அதிகரித்தது. ஏற்கெனவே 4 போ் உயிரிழந்தனா். 113 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT