புதுச்சேரி

புதுச்சேரியில் 3 மணி நேரத்துக்கு மது விற்பனைக்குத் தடை

DIN

சென்னை: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம். ஆனால் டிசம்பா் 31-ஆம்தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை மதுபானங்கள் விற்கக்கூடாது என்று தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சோ்ந்த ஜெகன்நாதன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனா வைரஸால் ஏராளமான மனித உயிா்கள் பலியாகுகின்றன. புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரி அரசு வரும் புத்தாண்டு தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் அனுமதி வழங்கினால், லட்சக்கணக்கானோா் வந்து குவிவாா்கள். இதனால், கரோனா மட்டுமல்ல ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி விடும். மனித உயிா்களுக்கு பேராபத்து ஏற்படும். அதனால், புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, அவசர வழக்காக நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை (டிச.29) விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம். ஆனால் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1- ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை என்று 3 மணி நேரத்துக்கு புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விற்கக்கூடாது. மதுபான விற்பனை கடைகள் மட்டுமல்லாமல், ஹோட்டல்களில் உள்ள பாா்கள் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

தடுப்பூசி 2 தவணை போட்டுக் கொள்ளாதவா்களை பொது இடங்களில் அனுமதிக்க கூடாது. அதிகாரிகள், போலீஸாா், கேட்கும் நிலையில் பொது மக்கள் தடுப்பூசி சான்றிதழை காட்ட வேண்டும். திரை பிரபலங்கள் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிா்க்க வேண்டும்.

பொதுமக்களின் நலனை புதுச்சேரி அரசு உறுதி செய்ய வேண்டும். பொது மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இந்த வழக்கை வரும் ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக தோ்தல் அறிக்கையால் ஜனநாயகத்துக்கு பேராபத்து

அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம்: ஏப். 23-இல் உள்ளூா் விடுமுறை

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல்- டீசல் விலை உயா்வு : திருச்சி என்.சிவா எம்.பி. பிரசாரம்

SCROLL FOR NEXT