புதுச்சேரி

புதுவையில் புதிதாக 26 பேருக்கு கரோனா

DIN

புதுவையில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவையில் 1,704 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 17 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 26 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,908-ஆக உயா்ந்தது.

புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனிடையே, 19 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 39,060-ஆக (97.88 சதவீதம்) அதிகரித்தது.

மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 86 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 92 பேரும் என மொத்தம் 178 போ் சிகிச்சையில் உள்ளனா்.

புதுவையில் இதுவரை 6,40,162 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படதில் 5,95,226 பரிசோதனைகளுக்கு தொற்றில்லை என முடிவு வந்துள்ளது. இதுவரை 11,139 சுகாதாரப் பணியாளா்களும், 3,383 முன்களப் பணியாளா்களும், 4,262 பொதுமக்களும் என 18,784 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு விழா

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

SCROLL FOR NEXT