புதுவை விடுதலை நாளையொட்டி காரைக்கால் கடற்கரை சாலையில் தேசியக் கொடியேற்றிவைத்து புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா உரையாற்றினார்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954}ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி விடுதலையானது. புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம், நவ.1-ஆம் தேதி திங்கள்கிழமை காரைக்காலில் கொண்டாடப்பட்டது. காரைக்கால் கடற்கரையில் விடுதலை நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, போலீஸார் அணிவகுப்பை பார்வையிட்டார்.
இதையும் படிக்க- அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: முதல்வர் ரங்கசாமி
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிகாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன் மற்றும் அரசுத்துறையினர், விடுதலைப் போராட்ட வீரர்கள், மக்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவின்போது புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை அமைச்சர் பறக்கவிட்டார்.
இதேபோல் புதுவை பிராந்தியத்துக்கு உட்பட்ட ஏனாம் பகுதியில் நடைபெற்ற விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சர் க. லட்சுமணன் தலைமை வைத்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காவலரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் மாஹே பிராந்தியத்தில் நடைபெற்ற விழாவில் வேளாண்துறை அமைச்சர் தேனி சி. ஜெயக்குமார் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
காரைக்காலில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். சந்திரபிரியங்கா தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.