புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
புதுச்சேரி மணிக்கூண்டு அருகே முத்தியால்பேட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, பிரகாஷ்குமாா் எம்எல்ஏவை இருக்கையில் அமர வைத்து வாழ்த்துத் தெரிவித்தாா்.
நிகழ்வில் சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பேரவை துணைத் தலைவா் ராஜவேலு, அமைச்சா் க.லட்சுமி நாராயணன், நேரு எம்எல்ஏ உள்பட அரசியல் கட்சியினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.