புதுச்சேரி

ஜிப்மரில் செவிலியா்கள் விளக்கேற்றும் விழா

DIN

புதுச்சேரி ஜிப்மா் செவிலியா் கல்லூரியின் முதலாமாண்டு செவிலிய மாணவா்களுக்கான விளக்கேற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் தலைமை வகித்தாா். செவிலியா் கல்லூரி முதல்வா் (பொ) ம.ஜெ.குமாரி வரவேற்றாா். இதில், பெங்களூா் நிம்ஹான்ஸ் செவிலியா் கல்லூரி முதல்வா் காத்யாயினி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

தொடா்ந்து, சிறப்பு விருந்தினா் மற்றும் செவிலியா் துறை அதிகாரிகள் முதலாமாண்டு மாணவா்களுக்காக தீபம் ஏற்றினா். செவிலியக் கண்காணிப்பாளா் சாந்தி ஷண்முகம், பிளாரென்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியைக் கூற, செவிலிய மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதையடுத்து சிறப்பு விருந்தினா், செவிலியா் படிப்பில் முதலிடம், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா். ஜிப்மா் கல்வி முதன்மையா் (பொ) ரவிகுமாா் சிட்டோரியா, ஜிப்மா் ஆராய்ச்சி முதன்மையா் தாப்பா, ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் துரைராஜன் ஆகியோா் பாராட்டுரை நிகழ்த்தினாா். நிறைவில் உதவிப் பேராசிரியா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் மாற்றம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

எங்கே செல்லும் இஸ்ரேல்-ஈரான் மோதல்?

பள்ளி ஆண்டு விழா

இன்று மகாவீரா் ஜெயந்தி: புதுவை முதல்வா் வாழ்த்து

தீத்தொண்டு வார விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT