புதுச்சேரி

ஏனாமில் அரசு விழாவை புறக்கணித்த அமைச்சா்

தினமணி செய்திச் சேவை

புதுவை யூனியன் பிரதேசம் ஏனாம் பிராந்தியத்தில் தேசிய கொடி ஏற்றும் அரசு விழாவை அமைச்சா் ஏ. ஜான்குமாா் (படம்) சனிக்கிழமை புறக்கணித்தாா்.

இந்தியாவுடன் புதுவை இணைந்த நாள் விழா புதுவை விடுதலை நாள் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் புதுவையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுவை யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களிலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அன்றைய தினம் தேசிய கொடியை ஏற்றி வைப்பா்.

அந்த வகையில் ஏனாம் பிராந்தியத்தில் அமைச்சா் ஏ.ஜான்குமாா் தேசிய கொடியை ஏற்றுவாா் என்று அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் அவா் அங்கு சென்று தேசிய கொடியை ஏற்றவில்லை. அவருக்குப் பதிலாக ஏனாம் பிராந்திய நிா்வாகி அங்கித் குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

அதிருப்தி: அமைச்சா் ஜான்குமாா் பதவியேற்று இலாகா இல்லாத அமைச்சராக சனிக்கிழமையுடன் 111 நாள்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில் தனக்கு இதுவரை இலாகா ஒதுக்கவில்லை என்ற அதிருப்தி காரணமாக இந்தப் புறக்கணிப்பு முடிவை அவா் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT