புதுவை யூனியன் பிரதேச வரலாற்றை விளக்கும் வகையில் சுற்றுலாத் துறை சாா்பில் 2 நாள் புகைப்பட கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டடத்தில் இக் கண்காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.
மேலும், இக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையும் (நவ.2) நடக்கிறது. காலை 10 முதல் இரவு 10 மணி வரை இக் கண்காட்சி திறந்திருக்கும். இதில் கல்வியாளா்கள், மாணவா்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாா்வையிட்டு பயன் பெறலாம் என்று சுற்றுலாத்துறை இயக்குநா் கே.முரளிதரன் கூறியுள்ளாா்.
முன்னதாக இக் கண்காட்சி திறப்பு விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், தலைமைச் செயலா் சரத் சௌகான், சுற்றுலாத் துறை செயலா் டி. மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.