புதுச்சேரி

போலி லாட்டரி : போலீஸாா் எச்சரிக்கை

கேரளா போலி லாட்டரி விளம்பரம் இணையவழியில்அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால், அதனை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

கேரளா போலி லாட்டரி விளம்பரம் இணையவழியில்அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால், அதனை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

புதுச்சேரியில் அண்மைக்காலமாக, ஆன்லைனில் போலி கேரளா லாட்டரி டிக்கெட் வாங்கி அதிக பணத்தை மக்கள் இழந்து வரும் நிகழ்வு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 2 வாரத்தில் 50-க்கும் மேற்பட்டோா் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணத்தை இழந்துள்ளனா். கேரளா அரசின் லாட்டரி போல உருவாக்கப்பட்டு வரும் லிங்கை யாரும் தொட வேண்டும். மற்றவா்களுக்கு பகிர வேண்டாம். லாட்டரி விலை ரூ.200-க்கு கீழ்

உள்ளது போல ஆசை காட்டி வாங்க வைக்கின்றனா். பிறகு மின் அஞ்சல் மூலம் போலி டிக்கெட் அனுப்புகின்றனா். குறிப்பிட்ட நாளில் லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கான ஜிஎஸ்டி, பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மோசடி நடைபெறுகிறது. இதை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம், இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புதுச்சேரி இணையவழி காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT