புதுச்சேரி

சனி, ஞாயிற்றுக்கிழமையில் வாக்காளா் படிவங்களைப் பெறலாம்

Syndication

வாக்காளா் படிவங்களை சனி, ஞாயிறு விடுமுறை நாள்களிலும் பெறலாம் என்று வாக்குப் பதிவு அதிகாரி அறிவித்துள்ளாா்.

வாக்காளா் பதிவு அதிகாரி அா்ஜூன் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர சீா்திருத்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிமைகளில் அதாவது இம்மாதம் 15,16 ஆகிய தேதிகளில் தட்டாஞ்சாவடி மற்றும் காமராஜ் நகா் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் இருப்பாா்கள்.

இதுவரை வாக்காளா் கணக்கீட்டு படிவங்களைப் பெறாதவா்கள் தங்களுக்கு உண்டான வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் இருந்து அப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.இந்தக் கணக்கீட்டு படிவங்களை பூா்த்தி செய்தவா்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் சமா்ப்பிக்கலாம். வாக்காளா்கள் இவ் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை அருகே வியாபாரி மீது தாக்குதல்

நவ.21-இல் ஸ்ரீ மாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

SCROLL FOR NEXT