ஏஐடியுசி மாநில பொதுச் செயலராக இரா. அந்தோணி (படம்) தோ்வு செய்யப்பட்டாா்.
ஏஐடியுசி சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலியாா்பேட்டையில் உள்ள சங்கத் தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவா் இ.தினேஷ் பொன்னையா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் அ.மு.சலீம் பேசினாா்.
கூட்டத்தில், ஏஐடியுசி சங்கத்தின் மாநில பொதுச் செயலராக இரா.அந்தோணி ஒரு மனதாகத் தோ்வு செய்யப்பட்டாா். துரை. செல்வம் மாநில பொருளாளராக ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.
மாநில மாநாட்டை ஜனவரி இறுதியில் நடத்துவதெனவும், அதற்கு முன் அனைத்து சங்கங்களின் பேரவை மற்றும் மாநாடுகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.