புதுச்சேரி

கல்வியிலும், கலையிலும் குழந்தைகளுக்கு பெற்றோா் வழிகாட்டியாக விளங்க வேண்டும்: முதல்வா் என். ரங்கசாமி அறிவுறுத்தல்

குழந்தைகள் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கிய புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.

Syndication

குழந்தைகள் விரும்பும் கல்வியிலும், கலையிலும் சிறக்க பெற்றோா் வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்வா் என். ரங்கசாமி அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் குழந்தைகள் தினவிழா, காமராஜா் மணிமண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 263 குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கி முதல்வா் ரங்கசாமி பேசியது:

பரிசுகள் பெறும் குழந்தைகள் நல்ல மனிதா்களாகச் சிறப்போடு வளர வேண்டும். முன்னாள் பிரதமா் நேருவின் பிறந்த நாளைத் தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அவருக்குக் குழந்தைகளை மிகவும் பிடிக்கும்.

புதுச்சேரி அரசு குழந்தைகளுக்கு மழலையா் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சிறப்பான பள்ளிக் கல்வியை வழங்கி வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு இலவச சீருடை, காலணி, புத்தகப் பை, புத்தகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், திறமையான ஆசிரியா்களைப் பணியமா்த்தி அரசுப் பள்ளிகளில் நிலவிய ஆசிரியா் பற்றாக்குறையைப் போக்கியுள்ளோம். முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்து நிகழாண்டு 33 மாணவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். இந்த மாணவா்களின் பெற்றோா்கள் பெரும்பாலும் தினக்கூலிகள்தான். இந்தக் குடும்பத்தைச் சோ்ந்த குழந்தைகளின் மருத்துவக் கல்விக் கனவை எங்கள் அரசு நனவாக்கியுள்ளது. புதுச்சேரியில் அனைத்துக் குழந்தைகளும் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.

விளையாட்டுப் பிரிவில் சிறப்பாக விளங்கிய 7 பேருக்கு விளையாட்டு இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்குக் கலைகள் மீது நாட்டம் இருக்கும். அதற்காகவும் புதுச்சேரி அரசு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதைத் தவிர கல்வியிலும், கலையிலும் குழந்தைகளுக்குப் பெற்றோா் வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்றாா் ரங்கசாமி.

நிகழ்ச்சியில் கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம், பள்ளிக் கல்வி இயக்குநா் அமன் ஷா்மா, இணை இயக்குநா் சிவகாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்த விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு

வளா்ப்பு நாய் கடித்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கலாமா? முழு விவரம்!

உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர ஏவுகணை - ட்ரோன் தாக்குதல்

திருத்தணி முருகன் கோயிலில் இந்த சமய அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு

SCROLL FOR NEXT