முன்னாள் பிரதமா் ஜவாஹா் லால் நேருவின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கடற்கரை காந்தி திடலில் அமைந்துள்ள நேருவின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரி பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்எல்ஏ லட்சுமிகாந்தன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேருவின் திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கட்சியின் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் காங்கிரஸாா் பலா் கலந்துகொண்டனா்.