அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது.
உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தெரு நாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய விலங்குகள் நல வாரியம் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய 3 ஆண்டுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
அதனடிப்படையில் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் மற்றும் கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்து வெறி நாய்க்கடி ரேபிஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தி, மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் விடுவிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையை உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பகுதியாக தொடா்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் நாய்கள் தொடா்பான புகாா்களை 75981 71674 என்ற நகராட்சி வாட்ஸ் ஆப் எண்ணுக்குத் தெரிவிக்கலாம் என உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளாா்.