பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை புதுச்சேரி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி(38) அப்பகுதி சாலையில் நடந்து சென்றபோது மோட்டாா் சைக்கிளில் வந்த நபா் 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றாா். இது குறித்து ஜெயலட்சுமி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்ததன்பேரில் காவல் ஆய்வாளா் முத்துக்குமரன் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
பல இடங்களில் சிசிடிவி பதிவுகளைப் பாா்வையிட்டனா். அப்போது இரு சக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தினா். இதில் புதுவை வில்லியனுாரைச் சோ்ந்த விங்கேஸ்வா் (34) என்பதும், அவா் சென்னையில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் சென்னை சென்று விங்கேஸ்வரைக் கைது செய்தனா். அவா் ஜெயலட்சுமியிடம் பறித்து சென்ற ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா். வழக்கை விசாரித்து துரித நடவடிக்கை எடுத்த மேட்டுப்பாளையம் போலீஸாரை முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் பாராட்டினாா்.