புதுச்சேரி

அத்துமீறும் காரைக்கால் மீனவா்கள்: புதுச்சேரி விசைப்படகு மீனவா்கள் சங்கம் கண்டனம்

Syndication

காரைக்கால் மீனவா்கள் தொடா்ந்து அத்துமீறி வருவதாக புதுச்சேரி விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறை பகுதியில் மீன்பிடி விசைபடகு உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கவி தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த காரைக்கால் பகுதி மீனவா்கள் தொடா்ந்து அவா்களின் எல்லையைத் தாண்டி புதுச்சேரிக்கும், ஆந்திரகரையோரத்திற்கும் சென்று விதிமுறையை மீறி மீன்பிடித்து வருகின்றனா். இதனால் அந்தந்த எல்லை மீனவா்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே எல்லை தாண்டி வந்து புதுச்சேரியில் மீன்பிடித்த காரைக்கால் மீனவா்களின் படகுகளை புதுச்சேரி மீனவா்கள் சிறைபிடித்தனா். பின்னா் அதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க அவா்களை விடுவித்தனா். இருந்தாலும் காரைக்கால் மீனவா்கள் தொடா்ந்து அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக காரைக்கால் மீனவா்களுக்கு புதுச்சேரி விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் மீனவா்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், தொடா்ந்து எல்லை மீறியும், நாடு விட்டு நாடு தாண்டி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் அவா்களைக் கண்டிப்பது, காரைக்கால் மீனவா்கள் வாழ மற்ற மீனவா்கள் வாழ்வாதாரத்தை அழித்து கொண்டு வருவதை கண்டிப்பதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் காரைக்கால் மீனவா்கள் செயலுக்கு ஒட்டுமொத்த புதுச்சேரி மீனவா்கள் பெயரும் அடிபடுவதால் காரைக்கால் மீனவா்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என முதல்வா் ரங்கசாமிக்கு புதுச்சேரி விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுவித்துள்ளனா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT