புதுவை நீதிமன்றத்தில் மின்னணு மனு தாக்கல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உச்சநீதிமன்ற இ கமிட்டி மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்யும் புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
அனைத்து உயா்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களிலும் இதைப் பின்பற்றவும் உத்தரவிட்டது. அதன்படி நீதிமன்றத்துக்கு நேரில் செல்லாமல், தங்கள் இடத்திலிருந்தே வழக்குகளைப் பதிவு செய்யலாம்.
இந்த மின்னணு வழக்குத் தாக்கல் காகிதமில்லாத நடைமுறையை ஊக்குவிக்கும். புதுவை நீதிமன்றங்களில் இந்த மின்னணு வழக்கு தாக்கல் முறை கட்டாயமாக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது.
இது குறித்து உயா்நீதிமன்றப் பதிவாளா் அல்லி உத்தரவு வெளியிட்டிருந்தாா். இதையொட்டி இந்த மின்னணு வழக்கு தாக்கல் முறை அமலுக்கு வந்துள்ளது.