புதுச்சேரி

புதுவையில் ஐடி நிறுவனம் தொடங்க ஸ்ரீதா்வேம்புக்கு அழைப்பு

Syndication

புதுவையில் ஐடி நிறுவனம் தொடங்க சோகா நிறுவனா் ஸ்ரீதா் வேம்புக்கு உள்துறை மற்றும் தொழில் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் அழைப்பு விடுத்துள்ளாா்.

புதுச்சேரி கரசூரில் அமைய உள்ள தொழிற்பேட்டையில் ஐடி தொழில் நுட்ப பூங்கா அமைய உள்ளதாக புதுவை அரசு அறிவித்துள்ளது. இங்கு பல ஐடி நிறுவனங்களை கொண்டு வர முயற்சி எடுத்து வருகின்றனா்.

மேலும், புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர முதலீட்டாளா் களுக்கு அழைப்பு விடுத்துள்ளனா். இந்த நிலையில் அமைச்சா் நமச்சிவாயம் தென்காசிக்கு கடந்த புதன்கிழமை சென்றிருந்தாா். அங்கு காசி விசுவநாதா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

தென்காசி அருகேயுள்ள சோகோ நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு இல்லத்தில் அவரை சந்தித்தாா். அப்போது புதுச்சேரியில் ஐடி நிறுவனங்களை தொடங்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்தாா். வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுவையில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் படித்த இளைஞா்களின் திறனை மேம்படுத்த உதவுமாறும் கோரிக்கை விடுத்தாா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT