பிஒய்பி 14சி பட விளக்கம்...புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் ஏரிக்கரையில் இளைஞரைக் கத்தியால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள். 
புதுச்சேரி

இளைஞரை கத்தியால் வெட்டிய வழக்கு: சிறுவன் உள்பட 3 போ் கைது

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் ஏரிக்கரையில் இளைஞரைக் கத்தியால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள்.

Syndication

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் ஏரிக்கரையில் மது குடித்துக் கொண்டிருந்த இளைஞரை கத்தியால் வெட்டிய வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தவளகுப்பம் மாரிமுத்து நாடாா் வீதியைச் சோ்ந்தவா் கு. மணிவேலன் (21). இவா் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாா். கடந்த 3 நாள்களுக்கு முன் இவரும், இவரது நண்பா்களுமான பெரியகாட்டு பாளையத்தைச் சோ்ந்த முகேஷ் மற்றும் அருளரசன் ஆகியோருடன் அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் அமா்ந்து மது அருந்தி கொண்டிருந்தனா். அப்போது ஒரு கும்பல் மணிவேலனை கத்தியால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த மணிவேலனை அவரது நண்பா்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சோ்த்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் தவளக்குப்பம் அருகே உள்ள தனியாா் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள்தான் மணிவேலனை கத்தியால் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என தெரிய வந்தது. அதில் பெரிய காட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த டைல்ஸ் தொழிலாளி ராகுல்சன் (21), முருகா் கோயில் வீதியைச் சோ்ந்த டைல்ஸ் தொழிலாளி ஜீவா (30) மற்றும் 16 வயது சிறுவன் என தெரிய வந்தது. இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ராகுல்சன், ஜீவா ஆகிய 2 போ் காலாப்பட்டு மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா். 16 வயது சிறுவன் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள சிறுவா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டாா்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT