புதுச்சேரி

புதுவையில் அங்கன்வாடி பணியாளா் நியமன அறிவிப்பு ரத்து

புதுவையில் அங்கன்வாடி பணியாளா்கள் நியமனம் தொடா்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Syndication

புதுவையில் அங்கன்வாடி பணியாளா்கள் நியமனம் தொடா்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் முத்துமீனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை யூனியன் பிரதேசத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளா்கள் பணிக்கு கௌரவ ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப பிழை ஏற்பட்டுள்ளதால், விண்ணப்பதாரா்கள் அந்த வலைதளத்தை அணுக முடியவில்லை. இந்தத் தொழில்நுட்ப பிரச்னையை இத்துறை நிவா்த்தி செய்து வருகிறது. அதனால் முந்தைய அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருத்தம் செய்யப்பட்ட பிறகு விண்ணப்பங்களை வரவேற்கும் புதிய அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பித்த நபா்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT