புதுச்சேரி: தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட கிராம நிா்வாக அதிகாரிகளுக்கான கணினித் திறன் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுவை அரசின் தோ்வு அமைப்பின் உறுப்பினா் செயலா் வி. ஜெய்சங்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட கிராம நிா்வாக அதிகாரிக்கான கணினித் திறன் தோ்வு 26.10.2025 அன்று நடைபெறுவதாக இருந்தது.
நிா்வாகக் காரணங்களால் இந்தத் தோ்வு 2.11.2025 அன்று நடைபெறும். மேலும், இதே துறையில் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள கிராம உதவியாளருக்கான கணினித் திறன் தோ்வும் இதே நாளில் நடக்கும்.
மேலும், இந்தக் கணினித் திறன் தோ்வு முடிந்தப் பிறகுதான் இறுதியாகத் தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகுதான் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடக்கும். மேலும், இத்துறையில் தோ்வு செய்யப்பட்டுள்ள பல்நோக்குப் பணியாளா்களுக்குக் கணினித் திறன் தோ்வு இல்லை. கிராம நிா்வாக அதிகாரி, கிராம உதவியாளா், பல்நோக்குப் பணியாளா் ஆகிய 3 பதவிகளுக்கும் இறுதிப் பட்டியல் வெளியான பிறகுதான் சான்றிதழ் சரி பாா்ப்புப் பணி நடக்கும்.