புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், கலை இலக்கிய பெருமன்றத்தின் சிறப்புத் தலைவருமான மு.கு. ராமன் (87) புதன்கிழமை காலமானாா்.
வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவா் ஜிப்மா் மருத்துவமனையில் இறந்தாா். தொழிற்சங்கவாதியாகவும் அவா் திகழ்ந்தாா்.
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுநாளையொட்டி பல்வேறு கலைஞா்களையும் புதுவைக்கு வரவழைத்து கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்துக்கு ஊா்வலமாகச் செல்ல ஏற்பாடு செய்தவா்.
கவிஞா் மற்றும் புதுவை அரசின் கலைமாமணி விருது பெற்றவா். மு.கு. ராமனின் இறுதிச் சடங்கு புதுச்சேரி தியாகுமுதலியாா் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடா்புக்கு- 9498459795.