புதுச்சேரி

புதுச்சேரி தாவரவியல் பூங்கா ரூ.9 கோடியில் புதுப்பொலிவு! பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா் முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரியில் சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான தாவரவியல் பூங்கா ரூ.9.11 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி அா்ப்பணித்தாா்.

Syndication

புதுச்சேரியில் சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான தாவரவியல் பூங்கா ரூ.9.11 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி அா்ப்பணித்தாா்.

பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் இந்தப் பூங்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்பட்டு மக்களின் பொழுது போக்குக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் 1826-ஆம் ஆண்டு இந்தப் பூங்கா நிறுவப்பட்டது. நகரத்தின் மையப் பகுதியில் சுமாா் 12 ஹெக்டோ் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த பூங்கா. புதுச்சேரியின் முக்கியச் சுற்றுலா தலமாக விளங்கிய இப்பூங்கா புனரமைப்புக்காக கடந்த 2 ஆண்டுகளாக மூடிக் கிடந்தது. இனி புதுச்சேரி மட்டுமின்றி வெளியூா் மக்களும் இதைப் பாா்வையிட முடியும்.

இந்தப் பூங்காவில் இருந்த இசை நடன ஊற்று மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. பாா்வையாளா்களைக் கவரும் வகையில் இசைக்கு ஏற்றவாறு நீா் ஊற்று உயரமாகவும், தாழ்வாகவும் எழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கவரும் வகையில் ஏற்கெனவே டீசலில் இயங்கிய சிறுவா் ரயில் இப்போது புனரமைக்கப்பட்டு பேட்டரியில் இயங்கும் மகிழ் ரயிலாக மாற்றம் பெற்றுள்ளது.

இதில் குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோா்களும் தாவரவியல் பூங்காவைச் சுற்றி வரலாம். மேலும், இந்தப் பூங்காவைச் சுற்றிப் பாா்க்க வரும் முதியோா், பெண்கள், குழந்தைகள், இயலாதோா் ஆகியோருக்காக 4 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இதைத் தவிர இந்தப் பூங்காவில்தான் மலா்த் திருவிழாவும் ஆண்டுதோறும் நடைபெறும். இந்தத் திருவிழா புதுச்சேரி மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் அதிகம் கவருவதாக இருக்கும். இந்தத் தாவரவியல் பூங்கா குறித்து வரும் பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு பாா்வையாளா் மையமும் இங்கு

உள்ளது. தட்ப வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தி அலங்காரச் செடிகள் மற்றும் அழகு செடிகள் வளா்ப்புக்காக இங்கு பசுமை குடில் ஒன்று இருக்கிறது. மேலும் அரிதான கற்றாழைச் செடிகளைப் பாதுகாக்கும் வகையில் கண்ணாடி இல்லம் ஒன்றும் இருக்கிறது. மேலும், நடைபாதையையொட்டி மலா் படுகையும் அமைந்துள்ளது. மேலும், ஒரு சிறிய குளத்தில் மலரும் தாமரையும் இருக்கிறது. இதைத் தவிர இரண்டு காளைகள் சண்டையிடும் காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹொ்பேரியம் தயாரிக்கும் தாவரவியல் மற்றும் உயிரி அருங்காட்சியகம், வனத்துறை, இயற்கை தொடா்பான மாணவா்களுக்கு உகந்த இடமாகவும் இந்தப் பூங்கா இருக்கிறது. இதைத் தவிர இந்தப் பூங்காவில் மீன் அருங்காட்சியகமும் இருக்கிறது. பாா்வையாளா்கள் பல்வேறு வண்ணங்களில் இங்கு மீன்கள் நீந்துவதைக் காண முடியும்.

மேலும், இந்த பூங்காவில் செல்போனில் செல்பி படம் எடுக்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா தொடா்பான குறிப்பேட்டையும் முதல்வா் ரங்கசாமி வெளியிட்டாா். சட்டப் பேரவைத் தலைவா் ஆா். செல்வம், வேளாண் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், எம்எல்ஏ அனிபால் கென்னடி, வேளாண்துறை செயலா் யாசின் மு. சௌத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பூங்கா கட்டணம்: பூங்கா தினந்தோறும் காலை 9 முதல் இரவு 7 வரை திறந்திருக்கும். பெரியவா்களுக்குக் கட்டணமாக ரூ.20, சிறுவா்களுக்குக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். வெளிநாட்டவா்களுக்கு ரூ.50. கல்வி நிறுவனத்தால் அத்தாட்சி பெற்று வரும் மாணவா்களுக்குக் கட்டணமாக ரூ.5 மட்டும் வசூலிக்கப்படும்.

மகிழ் ரயிலுக்குக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ.10, சிறியவா்களுக்கு ரூ.5. இசை நீா் ஊற்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 6.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் என்று இரண்டு காட்சிகளாக இருக்கும். இதற்குக் கட்டணமாக பெரியோருக்கு ரூ.10, சிறியவா்களுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. கட்டண ரசீதுகளை மாலை 6 மணிக்குள் வாங்க வேண்டும்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT