புதுவை யூனியன் பிரதேசத்தில் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும்.
ஆயுத பூஜையையொட்டி, வெளியூா் சென்றிருந்த ஆசிரியா்கள், ஊழியா்களின் நலன் கருதி கடந்த 21-ஆம் தேதி கூடுதலாக ஒருநாள் பூஜை விடுமுறை என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.
இதை ஈடு செய்யும் வகையில் 25-ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் புதுவை அரசின் உள்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி, புதுவை யூனியன் பிரதேசத்தில் சனிக்கிழமை அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும்.