விழுப்புரம்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் அளிப்பு

தியாகதுருகம், கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

DIN

தியாகதுருகம், கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தியாகதுருகம் அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலாதேவி தலைமை வகித்தார். பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் வெ.ஐயப்பா மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகளை வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர்கள் பாஸ்கரன், மேரிஹில்டாரணி, ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், பெற்றோர் - ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் அய்யம்பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதேபோல கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகளை பள்ளியின் மூத்த ஆசிரியர்களான இரா.ஜெயக்குமார், அ.ஆரோக்கியசாமி, இரா.செங்குட்டுவன் உள்ளிட்டோர் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ராமச்சந்திரன் சிறந்த மதிப்பெண்கள் பெற்று பெருமை சேர்த்த மாணவிகளைப் பாராட்டிப் பேசினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT