விழுப்புரம்

பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை கள்ளக்குறிச்சி கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் பா.ராஜேந்திரன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
பேரணி கிராமத் தெருக்களின் வழியாக சென்றது. அப்போது மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டியும், அங்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தயபடி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்ற இறைவணக்கக் கூட்டம் முடிந்ததும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகளைக் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கினார்.
நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை அ.ஜெயராணி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ராஜேஸ்வரி, கிராமக் குழுத் தலைவி கோ.செல்வி, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் ‘மாண்ட் எவோரா 25’ கலாசார விழா

பி.ஆா். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்

ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கரூரில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT