விழுப்புரம்

மூதாட்டியைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு

தியாகதுருகத்தில் மூதாட்டியைத் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

தியாகதுருகத்தில் மூதாட்டியைத் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் பழைய தபால் நிலையச் சாலை அருகே வசிப்பவர் சரஸ்வதி (80). அதே ஊரில்   உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற பூஜையில் பங்கேற்க வீட்டில் உள்ள அனைவரும் சென்றுவிட்டனராம்.
வீட்டில் சரஸ்வதி மட்டும் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் தலைக் கவசம் அணிந்து வந்த இருவர், மூதாட்டியைத் தாக்கி, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT