விழுப்புரம்

விழுப்புரம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் சாவு

விழுப்புரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

DIN

விழுப்புரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியை அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மனைவி கனகாம்பரம் (58). இவர் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
அப்போது, வீட்டின் முன் மின் கம்பி அறுந்து கிடந்ததைக் கவனிக்காமல், அதை மிதித்து விட்டார்.
இதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே கனகாம்பரம் உயிரிழந்தார். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT