விழுப்புரம்

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ. ஆய்வு

செஞ்சி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ. கே.எஸ்.மஸ்தான் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு செய்தார்.

தினமணி

செஞ்சி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ. கே.எஸ்.மஸ்தான் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு செய்தார்.
 அப்போது அவரிடம் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் இல்லையென நோயாளிகளும், பொதுமக்களும் தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ. கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.
 இதையடுத்து, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பயன்படுத்தப்படும் கழிப்பறைகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
 ஆய்வின்போது தலைமை மருத்துவ அலுவலர் தாகூர், டாக்டர்கள் ரமேஷ்பாபு, பூம்பாவை, நிர்வாகப் பிரிவு அலுவலர் கிரி, முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT