விழுப்புரம்

கீழ்ப்பெரும்பாக்கம் மாற்றுச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் மாற்றுச் சாலையில், குண்டும் குழியுமான இடங்களில் சிமென்ட் ஜல்லிக் கலவை கொட்டப்பட்டு,

தினமணி

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் மாற்றுச் சாலையில், குண்டும் குழியுமான இடங்களில் சிமென்ட் ஜல்லிக் கலவை கொட்டப்பட்டு, 4 நாள்கள் ஆகியும் தார்ச் சாலை அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர். எனவே, உடனடியாக தார்ச் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விழுப்புரம் ரயில்வே மேம்பாலச் சீரமைப்புப் பணி காரணமாக, கிழக்கு பாண்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்வதற்காக, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கீழ்ப்பெரும்பாக்கம் சாலையை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்த சாலை வழியே ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் பயணிக்கின்றன.
 ஆனால், அந்த மாற்றுச்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாகவும், பெரிய மேடுகளும் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வந்தனர். அந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
 இதையடுத்து, மாற்றுச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நகராட்சி முன் வந்துள்ளது. இதன்படி, கடந்த 3 தினங்களுக்கு முன்பு, சாலையில் சேதமடைந்த பகுதிகளில் சிமென்ட், ஜல்லி கலந்த கலவை கொட்டப்பட்டன. ஆனால், அதன் மீது இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக, அந்தக் கலவையில் இருந்த ஜல்லிகள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் பயணிப்பதில் கூடுதல் அவதியை சந்திக்கின்றனர்.
 எனவே, விரைவாக புதிய சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 மாற்றுச்சாலையில் உள்ள பள்ளங்களை சமன்படுத்தவே முதல் கட்டமாக ஜல்லிக்கலவை கொட்டப்பட்டுள்ளது. சாலை செப்பனிடப்பட்ட இடங்களில் மட்டுமே ஒரிரு நாளில் சாலை அமைக்கப்படும். முழுமையாக புதிய சாலை அமைக்கப்படாது என்று நகராட்சிப் பொறியாளர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT