விழுப்புரம்

தொடர்ந்து 28 ஆண்டுகளாக ரத்த தானம் அளிக்கும் டீ கடைக்காரர்!

விழுப்புரத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகளாக 112 முறை ரத்த தானம் அளித்து டீ கடைக்காரர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

தினமணி

விழுப்புரத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகளாக 112 முறை ரத்த தானம் அளித்து டீ கடைக்காரர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

ரத்தத்தை தானமாக வழங்கி சேவையாற்றும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் விழா, விழுப்புரத்தில் ரத்தக் கொடையாளர் தினத்தில் (ஜூன் 14) நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகளாக ரத்த தானம் அளித்து வரும் பிஏ பட்டதாரியான, டீ கடைக்காரர் பாராட்டப்பட்டார்.

விழுப்புரம் கே.கே.ரோடு முத்துவேல் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற 46 வயது ரத்தக் கொடையாளியான அவர், தொடர்ந்து 112 முறை ரத்த தானம் வழங்கியுள்ளார்.

விழுப்புரம் கே.கே.சாலையில் டீக் கடை நடத்தி வரும் அவர், தனது 18-ஆவது வயது தொடங்கி தற்போது வரை 28 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 4 முறை ரத்தத்தை தானமாக வழங்குவதை கடமையாகக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பிஏ படித்தபோது, தேசிய மாணவர் படையில் சேர்ந்த 18 வயதிலேயே ரத்த தானம் செய்யத் தொடங்கினேன். ரத்தத்தை தானமாக அளிப்பதால் பிறருக்கும் நன்மை, நமக்கும் நன்மை.

சிறப்பு முகாம்களில் பங்கேற்றும், பாதிக்கப்பட்டோர் அழைப்பை ஏற்றுச் சென்றும் ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் வழங்கி வருகிறேன். எனது ரத்தம் 18 வயதில் இருந்த அதே அளவு சுத்தத்துடன் இப்போதும் இருப்பதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரத்தம் கொடுப்பதால், எனக்கு சோர்வு ஏதுமில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளேன். எனது மனைவி பர்கானாவும் அவ்வப்போது ரத்த தானம் அளிக்கிறார்.

பிளஸ் 2 பயிலும் எனது மகன் ராகுலும் 18-ஆவது வயதில் ரத்த தானத்தைத் தொடங்கி உள்ளார். அவரும் தொடர்வார்.

ரத்த தானம் வழங்கி வருவதால், எனக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக ரத்தக் கொடையாளர் சான்றிதழ் வழங்கி மாவட்ட நிர்வாகம் கௌரவித்து வருகிறது என்றார் அவர்.

இவரைப் போன்ற பல ரத்தக் கொடையாளர்கள் சத்தமின்றி சேவையாற்றி உயர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

SCROLL FOR NEXT