மத்தியப் பிரதேச மாநிலத்தில், போராடிய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் விழுப்புரத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சங்கராபுரம் வட்டம் ஒருங்கிணைப்பாளர் ஞானவேல்ராஜா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர் அம்பேத்கர், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 5 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாட்டில் விவசாயமும், விவசாயிகளின் நிலையும் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசு மக்களை வஞ்சிக்கும் அரசாக உள்ளது. விவசாயிகள் அழிவிலிருந்து காக்கப்பட வேண்டும் என பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.