விழுப்புரம்

மரக்காணம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு

மரக்காணம் அருகே அடுத்தடுத்த இரு வீடுகளில் பணம், நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

தினமணி

மரக்காணம் அருகே அடுத்தடுத்த இரு வீடுகளில் பணம், நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 மரக்காணம் அருகே செய்யாங்குப்பத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் (48). இவர், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன், அதே கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தார். நள்ளிரவு வீட்டுக்குத் திரும்பியபோது, முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, 350 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடுபோயிருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.20 லட்சம்.இதேபோல, பக்கத்து வீட்டில், பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவ்விரு சம்பவங்கள் குறித்து மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT