விழுப்புரம்

மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்: 10 பேர் மீது வழக்கு

வானூர், விழுப்புரம் பகுதிகளில் மணலைத் திருடி, கடத்தியதாக 10 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி

வானூர், விழுப்புரம் பகுதிகளில் மணலைத் திருடி, கடத்தியதாக 10 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 வானூர் காவல் ஆய்வாளர் திருமணி தலைமையிலான போலீஸார், திருவக்கரை பேருந்து நிறுத்தம் பகுதியில் புதன்கிழமை காலை ரோந்து சென்றனர். அப்போது, அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்துகொண்டிருந்த 8 மாட்டு வண்டிகளை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
 ஆனால், மாட்டு வண்டிகளை அப்படியே விட்டு விட்டு, அதில் வந்தவர்கள் தப்பியோடினர். அனைத்து மாட்டு வண்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
 இதுதொடர்பாக திருவக்கரைப் பகுதியைச் சேர்ந்த சேகர் (45), முருகன் (45), சிவக்குமார் (45), மற்றொரு சிவக்குமார் (32), இருசப்பன் (36), ராமமூர்த்தி (40), ராஜகோபால் (32), சங்கர் (25) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 விழுப்புரம் பகுதியில்... விழுப்புரம் தாலுகா உதவி காவல் ஆய்வாளர் மருதப்பன் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை காலை ரோந்து சென்றனர். அப்போது, ஆனாங்கூர் பகுதியில் மணல் கடத்தி வந்து நிறுத்தி வைத்திருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக, ஆனாங்கூரைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் மீது தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 இதேபோல, ஜானகிபுரம் பகுதியில் மணல் கடத்தி வந்து நிறுத்தி வைத்திருந்த மாட்டு வண்டியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 இது குறித்து கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (45) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT