விழுப்புரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
விழுப்புரம், பூந்தோட்டம் நகராட்சிப் பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற முகாமில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு செவித் திறன் துணைக் கருவிகள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாற்காலிகள், நடைப்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன. வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆரோக்கியமேரி உதவி உபகரணங்களை வழங்கினார்.
முகாமில் சிறப்பு பயிற்றுநர்கள் மேரி, சத்தியராஜ், ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயன்முறை மருத்துவர் சௌந்தரராஜன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.