விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்ட ஆர்.பி.ரமேஷ் பொறுப்பேற்கும் நிகழ்வு, திண்டிவனம் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, அவர், திண்டிவனம் நகரில் உள்ள மகாத்மா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், நடைபெற்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு இந்நிகழ்வுக்கு நகரத் தலைவர் எம்.விநாயகம் தலைமை வகித்தார். சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஆர்.பூபதி, மாவட்ட பொதுச் செயலர் வி.தயானந்தம், மாவட்ட துணைத் தலைவர் கருணாகரன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.வி.தனுசு முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் சுப்பையா வரவேற்றார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்த்து வாக்குச் சாவடிக் குழு அமைப்பதெனவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை தூர் வார நிதி ஒதுக்கவும், தமிழக விவசாயிகளுக்கு பொதுத் துறை வங்கிகள், விவசாயக் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்கவும், படித்த இளைஞர்களுக்கு பணி வழங்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில பொதுச்செயலர் ஜானி, நிர்வாகிகள் மதிவாணன், புலிமணி, பொன்.ராஜா, வல்லம் கலைச்செல்வன், மெடிக்கல் வெங்கட், வட்டாரத் தலைவர்கள் காந்தி, கோவிந்தன், சுந்தரம், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.