செஞ்சி அருகே அண்ணனை வெட்டிக் கொலை செய்ததாக அவரது தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
செஞ்சி வட்டம், சின்னசாத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பாபிள்ளை (62). இவரது தம்பி சின்ராஜ் (60). இருவருக்கும் நிலப் பிரச்னை இருந்து வந்தது. பின்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை பழம்பூண்டியில் உள்ள பாகப்பிரிவினை செய்யப்பட்ட விளைநிலத்தில் வரப்பில் இருந்த மரத்தை சின்ராஜ் வெட்டியதாகத் தெரிகிறது. வரப்பில் பொதுவாக இருந்த மரத்தை ஏன் வெட்டுகிறாய் எனக் கூறி, அவரை அண்ணன் சின்னப்பாபிள்ளை தடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்ராஜ் கொடுவாளால் அண்ணன் சின்னப்பா பிள்ளையை வெட்டினார். இதில் காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இது குறித்து சின்னப்பாபிள்ளையின் மகன் ராஜன் அளித்த புகாரின்பேரில் அவலூர்பேட்டை போலீஸார் சின்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.