விழுப்புரம்

மாட்டு வண்டியில் மணல் கடத்தல்: 3 பேர் கைது

விழுப்புரத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி

விழுப்புரத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 விழுப்புரம் நகர உதவிக் காவல் ஆய்வாளர் பாலசிங்கம் புதன்கிழமை காலை ரோந்து சென்றனர். அப்போது, கே.கே.சாலையில் மணல் ஏற்றிக் கொண்டு சென்ற மாட்டுவண்டியை மடக்கிப் பிடித்து விசாரித்தார். விசாரணையில், மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் விழுப்புரம் அருகே சாலாமேடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (60) என்பதும், தென்பெண்ணை ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து மகாலிங்கத்தை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
 இதேபோல நகர உதவி காவல் ஆய்வாளர் விஜயக்குமார் புதன்கிழமை காலை ரோந்து சென்றபோது, தென் பெண்ணை ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்று கொண்டிருந்த சாலாமேடு பகுதியைச் சேர்ந்த சேகர் (60), கண்டம்பாக்கத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (52) ஆகியோரை காந்தி சிலை அருகே மடக்கிப் பிடித்தார். இதுதொடர்பாக நகர போலீஸார் சேகர், கலியமூர்த்தி ஆகியோரை கைது செய்து மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT