விழுப்புரம்

அரசுப் பள்ளி ஆசிரியை மகனுடன் திடீர் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை மகனுடன் புதன்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தினமணி

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை மகனுடன் புதன்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிபவர் சபரிமாலா.
 இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை. இவரது கணவர் மயிலம் ரயில் நிலையத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறார். இவர்களது மகன் ஜெயசோழன், சபரிமாலா பணிபுரியும் அதே பள்ளியில் 2ஆம் வகுப்பு பயில்கிறார்.
 புதன்கிழமை வழக்கம் போல பள்ளிக்கு தனது மகனுடன் வந்த ஆசிரியை சபரிமாலா, பள்ளி முன் உள்ள மரத்தின் கீழ் அமர்ந்து கையில் பதாகை ஏந்தியவாறு தர்னாவில் ஈடுபட்டார்.
 அந்தப் பதாகையில், நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை கொண்டுவர வேண்டும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
 தகவல் அறிந்து வெள்ளிமேடுபேட்டை போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து ஆசிரியையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதென போலீஸார் அறிவுறுத்தினர். இதையடுத்து, காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறி ஆசிரியை சபரிமாலா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT