கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட பள்ளிகளின் சார்பில் அறிவியல் கண்காட்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் கல்வி அலுவலர் இரா.குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ப.இராமச்சந்திரன் வரவேற்றார்.
கண்காட்சியை அ.பிரபு எம்எல்ஏ தொடக்கி வைத்து 17 அறைகளில் உள்ள மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 136 பள்ளிகளில் 90 பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சி.பால்ராஜ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் சி.ராஜசேகர், ப.தங்கபாண்டியன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கோமுகி.மணியன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் எஸ்.பச்சையாப்பிள்ளை, அ.ரங்கன், பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அ.குபேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் நா.இராமச்சந்திரன், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.