இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களின் சார்பில், ஆசிரியர் தினவிழா, பட்டிமன்றப் பெருவிழா, பரிசளித்து பாராட்டுவிழா ஆகிய முப்பெரும் விழாக கல்லூரி வளாகத்தில் உள்ள காமராஜர் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் கு.மோகனசுந்தர் வரவேற்றார்.
சேலம் வைசியா கல்லூரியின் முதல்வர் பி.வெங்கடேசன் பங்கேற்று மாணவர்களுக்கு நன்னெறி கருத்துகளை தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெ.ஆஞ்சலோ இருதயசாமி பங்கேற்று கள்ளக்குறிச்சி பகுதி பள்ளிகளில் இருந்து பல்வேறுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கும், ரொக்க பரிசு, சான்றிதழை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.
மாணவர்களின் பட்டி மன்ற நிகழ்வும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கல்லூரியின் துணை முதல்வர் பெ.ஜான்விக்டர் நன்றி கூறினார்.
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் ஈ.சுப்பிரமணியன், பொருளாளர் வீ.ஏழுமலை, தாளாளர் ஏ.பழனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணைத் தலைவர் எஸ்.முஸ்தாக்அகமது, நிர்வாக அலுவலர் ஆர்.குமார் ஆகியோர் ஆசிரியர் தினம் குறித்துப் பேசினர்.
பின்னர் கல்லூரிப் பேராசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் ஜி.லட்சுமணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் ஜி.வசந்த்டெசிடாரிஸ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.