விழுப்புரம்

மாணவிகளுக்கு மிரட்டல்: கல்லூரி மாணவர் கைது

விழுப்புரம் அருகே மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக, கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி

விழுப்புரம் அருகே மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக, கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
 விழுப்புரம் அருகே ஆ.கூடலூரைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி (35). செங்கல் சூளை தொழிலாளி. பிளஸ் 2 பயிலும் இவரது 17 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி மிரட்டினாராம்.
 இதே போல அவரது 13 வயது மகளையும் மிரட்டி வந்தாராம். இது குறித்து தட்டிக்கேட்ட சிவமூர்த்தியை அந்த இளைஞர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
 இது தொடர்பாக, காணை காவல் நிலையம், விழுப்புரம் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, சிவமூர்த்தி தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து போலீஸார் மீட்டு அழைத்துச் சென்றனர்.
 இதையடுத்து, சிவமூர்த்தியின் பெரிய மகள் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸார் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். புதன்கிழமை அந்த இளைஞரை மகளிர் போலீஸார் கைது செய்தனர். அந்த இளைஞர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT