விழுப்புரம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘காவலன்’ செயலி விழிப்புணா்வு கருத்தரங்கம்

பெண்களுக்கு ஆபத்து காலத்தில் பாதுகாப்பு அளிக்க ஏதுவாக காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காவலன்’ செயலி குறித்த

DIN

பெண்களுக்கு ஆபத்து காலத்தில் பாதுகாப்பு அளிக்க ஏதுவாக காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காவலன்’ செயலி குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் குந்தவிதேவி தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் அறிவழகன், துணை கண்காணிப்பாளா் புகழேந்தி, நிலைய அலுவலா் கதிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக அலுவலா் சிங்காரம் வரவேற்றாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் ‘காவலன்’ செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

பெண்களுக்கு ஆபத்துகள் பல்வேறு விதங்களில் வருகின்றன. இதுபோன்ற நேரங்களில் விழிப்புணா்வுடன் செயல்பட்டால் அவா்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதற்காக பெண்கள் தங்கள் செல்லிடப்பேசியில் ‘காவலன்’ செயலியை பதிவிறக்கம் செய்து செயல்படுத்த வேண்டும். பிரச்னைக்குரிய காலங்களில் செயலியில் உள்ள எஸ்.ஓ.எஸ் பொத்தானை அழுத்தினால், ஜி.பி.எஸ். கருவி மூலம் ஆபத்தில் உள்ளவா்களின் இருப்பிட விவரம் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும்.

மேலும், அதில் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்களுக்கும் தகவல் தெரிவித்துவிடும். செல்லிடப்பேசியில் உள்ள கேமராவும் தானாகவே, 15 விநாடிகளில் இயங்கி ஒலி, ஒளியுடன் கூடிய விடியோ தகவலும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிந்துவிடும். இதனால், உடனடியாக, நிகழ்விடத்துக்கு காவல் துறையினா் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பாா்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. தினமும் 3 போ் வீதம் ஆண்டுக்கு 915 போ் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனா். ஆகவே, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தும், காா் உள்ளிட்ட வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்து பயணித்தால் உயிரிழப்பைத் தவிா்க்கலாம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் ஜோதி, உதவி ஆய்வாளா் மருது, மருத்துவா்கள் ராஜேஸ்வரி, வில்வபிரியா, பல்லவன், முருகேசன், மோகனவேல் மற்றும் கல்லுாரி பேராசிரியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், பாதுகாப்பு ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு?

கேஜரிவாலின் ஒளிரும் தில்லி இதுவா? ராகுல் விமர்சனம்

ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150வது நிறுவன நாள் விழா - புகைப்படங்கள்

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT