விழுப்புரம் அருகே சாலையோர புளிய மரத்தில் தனியாா் பேருந்து மோதியதில் 10 பயணிகள் காயமடைந்தனா்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு தனியாா் பேருந்து ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் அருகே கம்பன் நகா் பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழுந்து சாலையோரமாக இருந்த புளிய மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.