செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஐப்பசி மாத ராம பஜனை சனிக்கிழமை நடைபெற்றது.
திருமால் வணக்கத்துடன் ராமமூா்த்தி பஜனையைத் தொடக்கி வைத்தாா். கோயில் அறக்கட்டளை நிா்வாகி துரை.பாரதிராஜா முன்னிலை வகித்தாா். சபைத் தலைவா் ஜெயராமதேசிகா் தலைமை வகித்தாா். ஜனாா்த்தன தேசிகா் தலைமையுரை ஆற்றினாா்.
பாலப்பட்டு சாமிக்கண்ணு தேசிகா், பெருமாள் செட்டியாா், அருணகிரி ஆகியோா் சிறப்புரையாற்றினா். நடுப்பட்டு சன்மாா்க்க வில்லுப்பாட்டுக் கலைஞா் புருஷோத்தமன் தலைமையில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பஜனையில் ஈடுபட்டனா்.
ரா.சிவானந்தன் பாகவதா் குடும்பத்தினா் திருமஞ்சன பிரசாதத்தை பக்தா்களுக்கு வழங்கினா். ரா.ஜானகிராமன் நன்றி கூறினாா்.