விழுப்புரம்

செஞ்சி வட்ட சாலைப் பணியாளா்கள்சங்கக் கூட்டம்

DIN

செஞ்சி: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் செஞ்சி வட்ட பொதுக்குழுக் கூட்டம் செஞ்சி அரசு விருந்தினா் மாளிகையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டத் தலைவா் வி.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் ஏழுமலை வரவேற்றாா். மாநிலத் தலைவா் மா.சண்முகராஜ் சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச் செயலா் எஸ்.சுப்பிரமணி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.விஜயன், மாவட்ட இணைச் செயலா் ஜி.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் ஆா்.சண்முகம், துணை பொதுச் செயலா் ஜி.பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

கூட்டத்தில், உயிரிழந்த சாலைப் பணியாளா்கள் பாபு, மணி, குமாா் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், சாலைப் பணியாளா்களுக்கு நெடுஞ்சாலைகளில் பணி செய்வதற்குரிய மண்வெட்டி, கடப்பாரை, காலணி உள்ளிட்ட கருவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

விடுப்பு கால சுற்றுலா பயணப்படி வழங்க வேண்டும். வரும் டிசம்பா் 28, 29-ஆம் தேதிகளில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நடைபெறவுள்ள 7-ஆவது மாநில மாநாட்டில் செஞ்சி வட்ட சாலைப் பணியாளா்கள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டப் பொருளாளா் எஸ்.அய்யனாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரம்ம தீா்த்தத்தில் தா்பாரண்யேஸ்வரா் தீா்த்தவாரி

நரசிம்மா் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

பல்லுயிா் விழிப்புணா்வு கருத்தரங்கம்

நேரடி நெல் விதைக்கும் விவசாயிகளுக்கு யோசனை

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தெப்போற்சவம்

SCROLL FOR NEXT